12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany PURE SCIENCE 1st Lesson Additional 3 Marks

12th Botany PURE SCIENCE 1st Lesson Additional 3 Marks

12th Botany PURE SCIENCE 1st Lesson Book Back Answers. 12th Standard Pure Science Grout Unit 6, 1st Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 6, 1st lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 9 Book Back Answers.

12th Bio-Botany Unit 6 | Lesson 1. தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப் பெருக்கம் – Additional 3 Marks Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium

1. முழு ஆக்குத்திறன் பற்றி எழுதுக.
  • ஒரு முழு தாவரத்தை உண்டாக்கும் மரபணுசார் திறன் முழு ஆக்குத்திறன் எனப்படும்.
  • ஒரு செல்லின் இந்த சிறப்புப் பண்பு தோட்டக்கலை, வனவியல் மற்றும் தாவரப்பெருக்கு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
  • எ.கா.கேரட் தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட முதிர்ந்த ஃபுளோயம் பாரன்கைமா செல்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தகுந்த ஊடகத்தில் வைத்து தூண்டப்பட்டு, செல் வகுப்பு அடைந்து ஒரு புதிய காரட் தாவரம் உருவாக்கப்படுகிறது.
2. பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பால் இனப் பெருக்கம் என்றால் என்ன? பாலிலா இனப்பெருக்கம் :
  • கேமீட்டுகள் ஈடுபடாமல் தன்னுடைய சொந்த சிற்றினங்களை பெருக்குவதற்கு உதவும் இனப்பெருக்க முறை பாலிலா இனப்பெருக்கம் எனப்படும். எ.கா. துண்டாதல் – ஸ்பைரோகைரா, பால் இனப்பெருக்கம்:
  • ஆண், பெண் கேமீட்டுகளின் உற்பத்தி மற்றும் இணைவு பால் இனப்பெருக்கம் எனப்படும்.
  • இதில் கேமீட்டுகளின் உற்பத்தி கேமீட் உருவாக்கம் என்றும், கேமீட்டுகளின் இணைவு கருவுறுதல் என்றும் அழைக்கப்படுகிறது. எ.கா. உயர்தாவரங்களின் விதைகள்.
3. டபீட்டம் இரட்டை தோற்றமுடையது என கூறக் காரணம் என்ன? 
  • மகரந்தப்பை சுவரின் உட்புற அடுக்கு டபீட்டம் ஆகும்.
  • டபீட்டத்தின் ஒரு பகுதி மகரந்த அறையை சூழ்ந்துள்ள இணைப்புத் திசுவிலிருந்து உருவாகிறது.
  • டபீட்டத்தின் மற்றொரு பகுதி வெளிப்புற சுவர் அடுக்கிலிருந்து உருவாகிறது.
  • இரண்டு வெவ்வேறு பகுதிகளிலிருந்து உருவாதலால் இரட்டைத் தோற்ற முடையது என கூறப்படுகிறது.
4. தாவரங்களின் தண்டின் தழைவழி இனப்பெருக்க முறைகளை விவரி
  1. மட்ட நிலத்தண்டு & அதன் கணுவின் கோண மொட்டு
  2. தரையடிக்கிழங்கு
  3. கிழங்கு – கிழங்கின்கண் (அ) டியூபா.
  4. குமிழ்த்தண்டு
  5. ஓடு தண்டு
  6. வேர் விடும் ஒரு தண்டு
  7. நீர் ஓடு தண்டு
  8. தரை கீழ் உந்து தண்டு
  9. சிறுகுமிழ் மொட்டுக்கள்
தழைவழி இனப்பெருக்க முறை
  1. மியூசா பாரடிசியாக்கா (வாழை) ஜிஞ்ஜிஃபெர் அஃபிசினாலே (இஞ்சி) குர்குமா லாங்கா (மஞ்சள்)
  2. அமோர் போபாலஸ் & கொலகேசியா (கருணை, சேனைகிழங்கு
  3. சொலானம் டியூபரோசசம் (உருளை)
  4. அல்லியம்சீபா மற்றும் லில்லியம் (வெங்காய், பூண்டு )
  5. சென்டெல்லா ஏசியாட்டிகா (வல்லாரை)
  6. மென்தா (புதினா ) ஃபிரகேரியா
  7. பிஸ்டியா, ஐக்கார்னியா
  8. கிரைசான்திமம்
  9. டயாஸ்காரியா, அகேவ்
15.தாவரங்களை அடையாளம் கண்டு வகைப்படுத்துதலில் எக்சைனின் பங்கு யாது?
  • எக்சைன் எனப்படுவது மகரந்தத்துகளின் வெளிப்புற அடுக்கு ஆகும்.
  • எக்சைனின் புறப்பரப்பு மென்மையாகவோ அல்லது பலவகை அலங்காரப்பாங்குகளுடன் உள்ளது
  • இந்த அலங்காரப் பாங்குகள் தாவரங்களில் தடிவடிவம், சிறு குழியுடைய கரணை போன்ற சிறு புள்ளி போன்ற வடிவில் காணப்படுகிறது.
  • இதனால் தாவரங்களை அடையாளம் காணவும் வகைப்படுத்துதலில் பயன்படுகிறது.
6. தன் மகரந்தச்சேர்க்கை மற்றும் அயல் மகரந்தச் சேர்க்கை வேறுபடுத்துக.
தன் மகரந்தச்சேர்க்கை (அல்லது) சுயகலப்பு
  1. ஒருமலரின் மகரந்தத்துகள் அதே மலரின் சூலக முடியை சென்றடையும் நிகழ்வு தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
  2. இது இருபால் மலர்களைக் கொண்ட தாவரங்களில் நடைபெறுகிறது.
  3. புதிய பண்புகள்: புதிய சிற்றனங்கள் மற்றும் புதிய வகைத் தாவரங்கள் உருவாகும் வாய்ப்பு குறைவு. எ.கா. மிராபலிஸ் ஜலாபா.
அயல் மகரந்தச்சேர்க்கை (அல்லது) வெளிகலப்பு
  1. ஒரு மலரில் உள்ள மகரந்தத்துகள், வேறொரு மலரில் உள்ள சூலக முடியைச் சென்றடையும் நிகழ்வு அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும்.
  2. இது இருபால் மலர் மற்றும் ஒரு பால் மலர்களைக் கொண்ட தாவரங்களில் நடைபெறுகிறது.
  3. வேறுபட்ட மரபணுக்கள் கொண்ட தாவரங்களின் கேமீட்டுகள் இணை வதால், புதிய சிற்றினங்கள் மற்றும் புதிய வகை தாவரங்கள் உருவாக்கப்படுகின்றன. எ.கா.ஹீலியான்தஸ்
7. காமிலினா பெங்காலன்ஸிஸ் தாவரத்தின் மகரந்தச்சேர்க்கையின் சிறப்பு யாது?
  1. இத்தாவரத்தின் தரைக்கு மேல் காணப்படும் மலர்கள் பிரகாசமான நிறத்துடன் திறந்தவகை மலர்களைக் கொண்டு பூச்சிகள் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுகின்றன.
  2. தரைகீழ் மலர்கள் தரைகீழ் மட்டநிலத் தண்டின் கிளைகளிலிருந்து உருவாகின்றன. இவையோ மந்தமான நிறத்துடன் மூடிய மலர்களைக் கொண்டு தன் மகரந்தச் சேர்க்கையில் ஈடுகின்றன.
  3. இவ்வாறாக திறந்தவகை மலர்களில் அயல் மகரந்தச்சேர்க்கையும், மூடிய வகை மலர்களில் தன் மகரந்தச் சேர்க்கையும் நடைபெறும். காமிலினா பெங்காலன்ஸிஸ் தாவரத்தின் மகரந்தச் சேர்க்கை சிறப்பு அம்சமாகும்.
8. அடன்சோனியா டிஜிடேட்டாவில் மகரந்தச்சேர்க்கை காரணி யாது? மகரந்தச்சேர்க்கைக்கான தகவமைப்பை விவரி? 
  • இத்தாவரத்தில் மகரந்தச்சேர்க்கை வௌவால்கள் மூலம் நடைபெறுகிறது. இந்த தாவரத்தில் மகரந்தத்தாளும், சூலக முடியும் மலர் உறைகளைத் தாண்டி நீட்டிக் கொண்டிருக்கின்றன.
  • மகரந்தத்தாள் கொண்ட மலர்களை வௌவால்கள் மார்புடன் இறுக்கமாக பற்றிக் கொண்டு மலரிலிருந்து தேனை எடுக்கின்றன.
  • இச்செயல் காரணமாக வௌவாலின் மார்பில் ஒட்டிக் கொண்டுள்ள எண்ணற்ற மகரந்தத் துகள்கள் அவை பூந்தேனிற்காக மற்றொரு மலரை நாடிச் செல்லும் போது அம்மலரின் சூலக முடியை சென்றடைகிறது.
9. தாவரங்களில் கரு உருவாதலின் குவாட்ரண்டு நிலை எனப்படுவது யாது?
  • இருவிதையிலை தாவர கருவளர்ச்சியின் போது கருமுட்டை குறுக்குவாக்கு பகுப்புற்று மேல் செல் அல்லது நுனிசெல் மற்றும் கீழ் அல்லது அடி செல்லை தருகிறது.
  • அடி செல்லில் குறுக்குவாக்கு பகுப்பும், நுனி செல்லில் செங்குத்து பகுப்பும் நடைபெற்று நான்கு செல் முன்கரு உருவாகிறது.
  • நுனி செல்லில் ஏற்படும் இரண்டாவது செங்குத்துப் பகுப்பு முதல் செங்குத்து பகுப்பிற்கு நேர்கோணத்தில் நடைபெறுகிறது.
  • இதனால் நான்கு செல் நிலை உருவாகிறது. இந்த நான்கு செல் நிலை குவாட்ரண்டு என அழைக்கப்படுகிறது.

10. அலிரோன் திசு என்றால் என்ன? அதன் பயன் யாது? 

  • இது தானியங்களின் (பார்லி, மக்காச்சோளம்) கருவூண் திசுக்களை சூழ்ந்து காணப்படும் மிகவும் சிறப்படைந்த செல்களால் ஆன திசுசு ஆகும்.
  • இது ஒன்று அல்லது ஒருசில அடுக்கு களால் ஆனது. இதன் செல்களில் காணப்படும் துகள்கள் அலிரோன் துகள்கள் எனப்படுகின்றன.
  • இவற்றில் ஸ்பீரோசோம்கள் காணப் படுகின்றன.
  • விதை முளைத்தலின் போது இச்செல்கள் அமைலேஸ்கள், புரோட்டியேஸ்கள் போன்ற ஒரு சில நீராற்பகுப்பு நொதிகளை சுரக்கின்றன.
  • இந்நொதிகள் கருவூண் திசு செல்களிலுள்ள சேமிப்பு உணவுப் பொருட்களைச் செரிக்க உதவுகின்றன.
11. ஹைப்போபைஸிஸ் வரையறு 
  • இரு விதையிலை தாவர கருவில் சஸ்பென்ஸரின் கீழேயுள்ள செல் ஹைப்போபைஸிஸ் எனப்படும்.
  • இச்செல்லில் ஒரு குறுக்கு வாக்கு பகுப்பும் இரண்டு செங்குத்து பகுப்புகளும் (ஒன்றிற்கு ஒன்று நேர்கோணத்தில்) நடைபெற்று எட்டு செல்கள் கொண்ட ஹைப்போபைஸிஸ் உருவாகிறது.
  • இந்த எட்டு செல்களும் நான்கு செல்கள் வீதம் இரண்டு அடுக்குகளில் அமைந்துள்ளன.
  • மேலடுக்கு வேர்மூடி மற்றும் புறத்தோலைத்தருகிறது.
  • இந்நிலையில் கரு இதய வடிவைப் பெறுகிறது.
12. இருபால் மலரின் அமைப்பை படத்துடன் விவரி.
  • ஒரு இருபால் மலர் புல்லிவட்டம், அல்லிவட்டம், மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம் என நான்கு வட்டங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் மகரந்தத்தாள் வட்டமும், சூலக வட்டமும் இன்றியமையாத பாகங்கள் எனப்படுகின்றன.

 12th Botany PURE SCIENCE 1st Lesson Additional 3 Marks

13. யூக்கா தாவரத்திற்கும், அந்துப்பூச்சிக்கும் இடையேயான உறவை விவரி (அல்லது) யூக்கா தாவரத்தில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதை விவரி.
  • யூக்காவிற்கும், அந்துப்பூச்சிக்கும் (டெஜிகுலா யூக்காசெல்லா) இடையே யான உறவு கட்டாய ஒருங்குயிர் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகும். அந்துப்பூச்சி மலரின் சூலகப்பையினை துளையிட்டு முட்டையிடுகிறது. பின்னர் மகரந்தத்துகள்களை சேகரித்து பந்து வடிவில் சூலகமுடியின் உள்ளீடற்ற பகுதி வழியாக உள்ளே தள்ளுகிறது.
  • கருவுறுதல் நடைபெற்று விதைகள் உருவாகின்றன. முட்டைப்புழுக்கள் (லார்வாக்கள்) வளரும் விதைகளை உண்ணுகின்றன. உண்ணப்படாத சில விதைகள் தாவரத்தின் பெருக்கத்திற்கு உதவுகின்றது.
  • இதில் ஆச்சரியம் என்னவெனில் அந்த அந்துப்பூச்சிகள் யூக்காவின் மலர்கள் இன்றி உயிர்வாழ இயலாது. இத்தாவரமும் அந்துப்பூச்சிகளின்றி பாலினப் பெருக்கம் செய்ய முடியாது.

Leave a Reply