12th Botany Unit 10 Lesson 9 Additional 3 Marks

  12th Botany Unit 10 Lesson 9 Additional 3 Marks

TN 12th Bio-Botany Unit 10, 9th lesson Additional 3 Marks Question and Answers, 9th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 8 Book Back Answers.

12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 9. பயிர் பெருக்கம் – Additional 3 Mark Answers

12th Botany 9th Lesson பகுதி-II. கூடுதல் வினாக்கள் 3 Marks

1. பொருளாதார தாவரவியல் எந்தெந்த துறைகளை இணைக்கிறது? 
  • உழவியல், மானடவியல், தொல்லியல், வேதியியல், சில்லறை மற்றும் பெரும் வணிக துறைகளை இணைக்கிறது.

2.தாவரங்களை வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல் என்றால் என்ன? 

  • அது தாவரச் சிற்றினங்களை மனிதனின் கட்டுக்குள் கொண்டு வருவதாகும்.

3.இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

  • பழைய பாரம்பரிய விவசாய முறையே இயற்கை வேளாண்மையாகும்.
  • 20ம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் மிக வேகமாக மாறிவரும் விவசாய முறைகளுக்கு எதிராக  மீட்டுக் கொண்டு வரப்பட்டது.
  • இது மீள்நிலைத்த மண்வளம், சூழல்வளம், மற்றும் மக்கள் வளத்திற்கான வேளாண் முறை யாகும்.

4. பியூவிரியா சிற்றினம் எவ்வாறு உயிரி பூச்சிக் கொல்லியாக செயல்படுகிறது?

  • ஒரு மண்ணில் இயற்கையாக வாழக்கூடிய ஒரு பூச்சி நோயுயிரி பூஞ்சையாகும்.
  • இது பல்வேறு கணுக்காலி சிற்றினங்களில் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வெள்ளை மஸ்கர் டைன் நோயிலிருந்து தாவரத்தை பாதுகாக்கிறது.
  • ரைசாக்டோனியா சொலானி என்ற பூஞ்சையால் தக்காளியில் ஏற்படும் நாற்றுமடிதல் நோயை கட்டுப்படுத்துகிறது.

5.தழை உரம் மற்றும் தழையிலை உரம் வேறுபடுத்துக.

தழை உரம்
  1. தழை உரப்பயிர்களை வளர்த்து அவற்றை நேரிடையாக வயல்களிலிட்டு உழுவது தழை உரமிடல் என்பதாகும்.
  2. மண்ணில் தழைச்சத்தை உயர்த்துகிறது.
  3. மண்ணின் அமைப்பையும் இயற்பியல் காரணியையும் மேம்படுத்துகிறது.

தழையிலை உரம்

  1. தாவரங்களின் இலைகள், கிளைகள், சிறுசெடிகள், புதர்செடிகள், தரிசு நிலங்களிலிலுள்ள தாவரங்கள் மற்றும் வயல்வெளிகளின் வரப்புகளிலுள்ள போன்றவற்றை பயன்படுத்துவதைக் குறிக்கும்.
  2. கொன்றை, அகத்தி, வேம்பு மற்றும் புங்கை போன்ற தாவரங்களை தழையிலை உரத்திற்கு பயன்படுத்தலாம்.

6.பயிர்பெருக்கம் என்றால் என்ன?

  • தகுந்த சூழ்நிலையில் பயிர்வகைகளில் உயர் விளைச்சல், சிறந்த தரம், நோய் எதிர்ப்புத்திறன், குறுகிய கால வாழ்நாள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அறிவியலே பயிர்பெருக்கம் ஆகும்.

7. தேசியத் தாவர மரபியல் வளத்துறை பற்றி குறிப்பு வரைக.

  • இது நமது நாட்டிலுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பயிர் இரகங்களை அறிமுகப்படுத்திப் பராமரிக்கிறது.
  • மூலிகை மற்றும் தாவரவியல் சார்ந்த தாவரங்களையும் வனமரங்களையும் பாதுகாக்கும் பொறுப்பிலும் இருக்கிறது.
  • இதன் தலைமையகம் புதுதில்லியிலுள்ள, இரங்கபுரி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

8. கலபுறுத்தம் என்றால் என்ன?

  • மரபணுவகையத்தில் வேறுபட்ட இரண்டிற்கு மேற்பட்ட தாவரங்களைக் கலப்புறச் செய்யும் முறைக்குக் கலப்புறுத்தம் என்று பெயர்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரகச்சிற்றினங்களின் தகுந்த பண்புகளை இணைக்கப்பயன்படும் மிகச்சிறந்த வழிமுறையாகவும் உள்ளது.
  • இயற்கையான கலப்புறுத்தம் நிகழ்வு முதன்முதலாகக் காட்டன் மேதர் என்பவரால் சோளப்பயிரில் அறியப்

9. பொய்கலப்பின வீரியம் என்று ஏன் அழைக்கின்றோம் ? காரணம் கூறுக. 

  • சந்ததி தாவரமானது உடல் வளர்ச்சியில்பற்றோர் தாவரங்களை விட மேம்பட்டும் காணப்படும்.
  • விளைச்சலிலும், தகவமைப்பிலும், மலட்டுத்தன்மையுடனோ அல்லது குறைந்தளவு வளமானதாகவோ காணப்படுகிறது.

  12th Botany Unit 10 Lesson 9 Additional 3 Marks

10. சில பயிர்களின் இரகங்கள் மற்றும் அதன் நோய் எதிர்ப்பு திறன் பற்றி அட்டவணை வரைக.

பயிர்
  1. கோதுமை
  2. பிராசிகா
  3. காலிஃபிளவர்
  4. காராமணி
  5. மிளகாய்

இரகங்கள்

  1. ஹிமகிரி
  2. பூசா சுவர்னிம்
  3. பூசா சுப்ரா, பூசா ஸ்போனபால் K-1
  4. பூசா கோமல்
  5. பூசா சடபஹர்

நோய் எதிர்ப்பு திறன்

  1. இலை மற்றும் பட்டைத்துரு ஹில் பண்ட்
  2. வெண்துரு
  3. கருப்பு அழகல் மற்றும் சுருள் கருப்பு அழகல்
  4. பாக்டீரியா அழகல்
  5. மிளகாய் மொசைக் தேமல் வைரஸ்

11. நோரின் – 10 பற்றி சிறு குறிப்பு தருக. 

  • இது ஒரு குட்டை மரபணு கொண்ட கோதுமை ரகமாகும்.
  • கான்ஜிரா இனாசுகா என்பவர் தேர்ந்தெடுத்த அரைக்குட்டை கோதுமை இரகம்
  • பல கோடி மக்களின் பசியையும், பட்டினியையும் போக்க உதவியது.

12. பயிர்பெருக்கத்தின் மூலம் பூச்சி எதிர்க்கும் திறன் கொண்ட தாவரங்களை எவ்வாறு உருவாக்கலாம்? 

  • ஒம்புயிரித் தாவரங்களின் பூச்சி எதிர்க்கும் திறனானது புறத்தோற்றம், உயிரிவேதியியல், உடற்செயலியல் போன்ற பண்புகளை கொண்டு அமையலாம்.
  • பல தாவரங்களின் தூவிகளுடைய இலைகள் பூச்சி எதிர்க்கும் திறனுடன் தொடர்புடையதாக உள்ளன. (எ.கா) பருத்தியின் இலைத்தத் துப்பாக்கி எதிர்ப்பு திறன்.

13. உயர்ரகப் பயிர்கள் பெற பயன்படுத்தும் நவீன பயிர்பெருக்க முறைகளைப் பட்டியலிடுக. 

  • மரபணுபொறியியல், தாவரத் திசு புரோட்டோபிளாச இணைவு, உடல் இணைவு முறை மற்றும் மூலக்கூறு குறிப்பு ஆகும்.

14. சடுதி மாற்றம் வரையறு.

  • ஒரு உயிரினத்தின் மரபணுவகையத்திலோ அல்லது புறத்தோற்ற வகையத்திலோ திடீரென மரபுவழியாக ஏற்படும் மாற்றம் சடுதி மாற்றம் எனப்படும்.

15. காமா தோட்டம் (அ) அணுத்தோட்டம் வரையறு

  • கோபால்ட் 60 (அ) சீசியம் 137 போன்ற கதிர்வீச்சுகளைப் பயன்படுத்தி தகுந்த சடுதி மாற்றங்களைப் பயிர் தாவரங்களில் உண்டாக்கும் ஒரு முறையாகும்.
  • இந்தியாவில் முதல் காமாத் தோட்டம் கொல்கத்தாவில் உள்ள போஸ் ஆய்வு நிறுவனத்தில் 1959 -யிலும்
  • இரண்டாவது தோட்டம் 1960-யிலும் ஆரம்பிக்கப்பட்டு அவற்றின் மூலம் பல மரபுவழி வேறுபாடுகள் கொண்ட பயிர்கள் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டது.

16. உயிர்வழி ஊட்டம் சேர்த்தல் வரையறை தருக.

  • மனித உடல்நலத்திற்காக அதிகளவு வைட்டமின் களோ அல்லது அதிக அளவு புரதங்களோ (அ) கொழுப்பு சத்துக்களோ நிறைந்த பயிர்களைப் பெருக்குவது உயிர்வழி ஊட்டம் சேர்த்தல் எனப்படும்.

Leave a Reply